செய்திகள்

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியும் மூடப்பட்டது

வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்று வருகின்றார். இவர் வேறு நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, வவுனியா நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவியுடன் தொடர்புகளை பேணியவர்கள் புளியங்குளம் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றுவருவதனால் குறித்த பாடசாலை இன்று புதன்கிழமையிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Back to top button