செய்திகள்

சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்தனர்.

காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி 1

விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதி பாராட்டினர்.

இதன்போது ஜனாதிபதியுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி 2

Back to top button