2021ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோகம் தான்
அடுத்து வரும் 2021ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்கள் ராசிப்படி 2021இல் சனி பகவான் ஆறாம் வீட்டிலும், செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டிலும், குரு பகவான் ஏழாவது வீட்டிலும் இடம் பெயருவார்கள்.
நிழல் கிரங்களான ராகு மற்றும் கேது முறையே 6 மற்றும் 4 ஆகிய இடங்களுக்கு பெயர்ச்சி அடைவார்கள். இது போன்ற கிரக அமைப்பில் உங்களுடைய வாழ்க்கைத் துணையாக இருக்கும் நபர்களுடன் நல்ல புரிதல் உண்டாகும்.
குடும்பம்- குடும்பத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
அதுவரை சண்டை, சச்சரவுகளோடு இருந்தாலும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நிம்மதியான சூழல் உண்டாகும். உற்றார், உறவினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.
அவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் உண்டாகும். உங்களுடைய அன்பான குடும்பத்திற்காக சிறிது நேரத்தை கூடுதலாக செலவிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது.
கணவன் மனைவி இடையான நெருக்கத்தை அதிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் இடைவெளி மன அமைதியை கெடுக்கலாம்.
வியாபாரம் மற்றும் தொழில் – தொழில் மற்றும் வியாபாரத்தில் ராகுவின் பார்வையால் உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நயமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவீர்கள்.
உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து எதிரிகள் பொறாமை படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இதனால் தேவையில்லாத புதிய பிரச்சனைகளும் உருவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
செவ்வாய் பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய பணிகளில் சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும்.
எதிர்வரும் சவால்களை கூட திறமையாக கையாளுவீர்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செவ்வாயின் இட மாற்றத்தினால் சில இடையூறுகள் ஏற்பட்டு மறையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
உத்தியோகம் – உத்தியோகத்தை பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்கள் நிறைய அலைச்சல்களை சந்திப்பீர்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் குரு பகவான் சேர்ந்து இருப்பதால் நிறைய பிரச்சனைகளை கொடுப்பார்கள். கிரகப் பெயர்ச்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் வரை சுமாரான பலன்கள் இருக்கும்.
ஆண்டின் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நல்ல படியாக நடக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு ஆண்டின் இறுதியில் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பொருளாதாரம் – பொருளாதாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் பலன்களும் இருக்கும்.
பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவினங்களும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரமாக இருக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும், ஏப்ரல் மாதம் கூடுதல் பலன்கள் உண்டாகும். பணம் பல வழிகளில் வந்தாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் நிச்சயம்.
பெண்களுக்கு – பெண்களைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
ஒருவிதமான பதற்றத்துடன் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்லதொரு மாற்றம் உண்டாகும்.
உடல் நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. சத்தான உணவு பழக்கத்தால் மருத்துவ ரீதியான வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம். இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
பரிகாரம் – சனிக் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்து வர நல்லதெல்லாம் நடக்கும்.
வியாழன் கிழமையில் மரங்களை நடுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற நல்ல காரியங்களை செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.