செய்திகள்

15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை தொகுப்பு….! மகிழ்ச்சியில் மக்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியக்கூடிய பரிசோதனை தொகுப்பு அவுஸ்திரேலியாவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொகுப்பு அடுத்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக அந்த நாட்டின் கொரோனா வைரஸ் பரிசோதனை துரிதமாக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால் பரிசோதனைகள் விரிவாக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பரிசோதனை தொகுப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு அந்த நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசியர் சஞ்சய சேனாநாயக்கவால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் தொடர்பான மருத்துவ நிபுணரான இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவர் இது தொடர்பில் விளக்கமளிக்கையில், கொரோனா வைரஸ் பரிசோதனை முறை கர்ப்ப பரிசோதனைக்கு இணையானது என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு துளி இரத்தத்தை பயன்படுத்தி 15 நிமிடங்களில் குறித்த வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதாக என பரிசோதிக்க முடிவதுடன் நாசி குழியை பரிசோதிப்பதற்காக 45 நிமிடங்களே செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தற்போதுள்ள மருத்துவ பரிசோதனை தொகுப்பின் ஊடாக பெறுபேற்றறை பெறுவதற்கு 5 முதல் 6 மணித்தியாலங்கள் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த புதிய மருத்துவ பரிசோதனை தொகுப்பின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படாதவர்களையும் கண்டறிய முடியும் என மருத்துவ பேராசியர் சஞ்சய சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச் செய்தி

தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வந்த மேலும் 315 பேர் இன்றைய தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மட்டக்களப்பு – புனானை மற்றும் வவுனியா உள்ளிட்ட மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அவர்கள் வெளியேறியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த குறித்த தரப்பினர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Back to top button