ஆன்மிகம்

(25.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil

பஞ்சாங்கம்

நாள்வியாழக்கிழமை
திதிஏகாதசி காலை 6.39 வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்ஆயில்யம் இரவு 8.13 வரை பிறகு மகம்
யோகம்சித்தயோகம் இரவு 8.13 வரை பிறகு அமிர்தயோகம்
ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம்பகல் 11.00 முதல் 12.00 வரை
சந்திராஷ்டமம்பூராடம் இரவு 8.13 வரை பிறகு உத்திராடம்
சூலம்தெற்கு
பரிகாரம்தைலம்

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்குப் புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் நடைபெறும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். வியாபாரம் சிறக்கும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் இன்று அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு முதலீடு செய்ய வேண்டாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கடகராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வீரபத்திர சுவாமியை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரிகள் கடையை விரிவாக்கம் செய்ய ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னிராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரிகள் எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று சரபேஸ்வரரை வழிபடவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொரு வர் அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் பாக்கிகளை வசூலிப்பதில் கடுமைகாட்டமல் நடந்துகொள்வது நல்லது. இன்று அம்பிகையை வழிபடுவது மிகச் சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சக வியாபாரிகளிடம் தேவையின் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகரராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலில் மட்டும் வியாபரிகள் கவனத்துடன் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார் கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரம் தொடர்பாக எதிர்பாத்துக் காத்திருந்த வங்கிக் கடன் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று கிடைக்கும்விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

Back to top button