செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்

நாட்டில் ஒரேநாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் 997 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 102,376 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 944 பேர் பேலியகொட – மினுவாங்கொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவார்.

ஏனைய 45 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதுடன், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய எட்டுப் பேரும் அடங்குவர்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 266 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்சமயம் நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 7,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் சந்தேகத்தில் 939 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக ,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 644 இல் இருந்து 647 ஆக அதிகரித்துள்ளது.

Back to top button