செய்திகள்

வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை!

இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்காக புதிய விசா நடைமுறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 10 வருடங்களும், 300,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 5 வருடங்கள் இலங்கையில் தங்குவதற்கு வீசா வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டு சென்று இலங்கை குடியுரிமையை இழந்தவர்களுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் கால எல்லை வரை நிரந்தரமாக நாட்டில் தங்க விசா அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதற்காக 1948 இன் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 14(1) மற்றும் 14(2) ஆம் சரத்தினை திருத்தம் செய்வதற்கும், 14(3அ) என்ற சரத்து ஒன்றை புதிதாக உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
புதிய நடைமுறை தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Image result for srilanka visa

Back to top button