செய்திகள்

அம்மா எங்கே என கதறும் சிறுமி- விமானாதாக்குதலிற்கு மத்தியில் மீட்கப்பட்டார்

அம்மா எங்கே என கதறும் சிறுமி- விமானாதாக்குதலிற்கு மத்தியில் மீட்கப்பட்டார்

சிரியாவில் விமானதாக்குதல்களிற்கு மத்தியில் சிறுமியொருவர் காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவே வெளியாகியுள்ளது.

விமானதாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வீட்டின் கீழ் சிக்கி இரும்புதுண்டொன்றை பிடித்தபடி உயிர் பிழைப்பதற்கு சிறுமி முயல்வதை வீடியோ காண்பிக்கின்றது.

சிரியாவின் வெள்ளை தலைக்கவச மனிதாபிமான அமைப்பை சேர்ந்த பணியாளர் ஒருவர் சிறுமியை காப்பாற்ற முயல்கின்றார்.

எனது அம்மா எங்கே என அழுதபடி சிறுமி கேட்பதையும் அவர் அங்கேயிருக்கின்றார் என மனிதாபிமான பணியாளர் தெரிவிப்பதையும் காணமுடிகின்றது.

அம்மா எங்கே என கதறும் சிறுமி- விமானாதாக்குதலிற்கு மத்தியில் மீட்கப்பட்டார் 1

எனினும் அடுத்தடுத்து இடம்பெற்ற விமானதாக்குதலில் அந்த சிறுமியின் தாயார் உயிரிழந்துவிட்டார் என மனிதாபிமான பணியாளர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்டபகுதியொன்றை தாக்கிவிட்டு செல்லும் விமானம் மீண்டும் அந்த இலக்கை தாக்கும் நடைமுறை சிரியாவில் உள்ளது அதன் போதே சிறுமியின் தாயார் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மற்றும் ஒன்பது வயதான இரு பிள்ளைகளும் பலியானர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை தலைக்கவசம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஹப்ரா காப்பாற்றப்படுவதை  வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

முதல் தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றவேளையும் அந்த சிறுமிஇடிபாடுகளிற்குள் சிக்குண்ட நிலையில் காணப்பட்டார்,என தெரிவித்துள்ள அப்துல்லா என்பவர் நான் அந்த சிறுமியை தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தேன் பின்னர் ஏனையவர்கள் இணைந்து காப்பாற்றினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்மா எங்கே என கதறும் சிறுமி- விமானாதாக்குதலிற்கு மத்தியில் மீட்கப்பட்டார் 2

என்னால் அந்த சிறுமியை கைவிடமுடியவில்லை ஒருவரை காப்பாற்ற முயலும்போது அவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாய் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அவருக்கு தெரிவிக்க முடியவில்லை,அவர் உள்ள நிலைமையை மறக்க செய்ய முயன்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் முதலில் அந்த இடத்திற்கு சென்றவேளை சிறுமியின் தாயார் உயிருடன் இருந்தார் ஆனால் இரண்டவாது விமானதாக்குதலின் பின்னர் அவர் மௌனித்து விட்டார் என அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Back to top button