ஆன்மிகம்

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. இந்த நான்கு ராசியினருக்கும் ஏற்படப்போகும் அற்புத பலன்கள்! -Athisara guru peyarchi 2021

சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு.

இதைத்தான், அதிசார கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஆங்கிலத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.

அப்படி, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் சுப பலன்களை பெறப் போகும் ஐந்து ராசிகள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்கு 5-ஆம் பார்வை இருப்பதால் உங்கள் ராசிக்கு நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும் யோகம் உண்டு.

மேலும், தொழில், உத்தியோகம் சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் நீங்கி நல்ல ஒரு முன்னேற்றமான பாதை உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மீனத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான்.. இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம் என்ன?- Suriya peyarchi 2021

சிம்மம்

சிம்ம ராசியில் ஏழாம் பார்வை இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள்.

உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளும் சீராகி வரும்.

பின்னர், தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.

athisara guru peyarchi 2021
துலாம்

துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும்.

உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற் பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.

அதுமட்டுமின்றி தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.

மீனத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான்.. இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம் என்ன?- Suriya peyarchi 2021

கும்பம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இதில், அதிசார பெயர்ச்சி அடைந்த குரு பகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருக்க இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குரு பகவான் வழிபாடு செய்வதும்,

குரு பகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவ கிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

Back to top button