செய்திகள்

50,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவார்கள். எப்போது?

Australia: இது எப்போது நடக்கும் என்பது தெரியாது என்ற காரணத்தால் நாட்டின் எல்லைப் பாதுகாப்புத் துறையின் செயல்திறன் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல் காரரும் தொழிலாளர்களைச் சுரண்டக் காத்திருக்கும் முதலாளிகளும், இப்படி வான் வழியாக, சட்டவிரோதமாக மக்களை நாட்டினுள் கொண்டு வருகிறார்கள் என்று எச்சரிக்கும் Labor கட்சி, இந்த சிக்கலை அரசாங்கம் ஒழுங்காகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

விமானம் மூலம் வந்த பின்னர், புகலிடம் கோரியவர்களில் 46,391 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று ஜனவரி மாத இறுதியில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.  அவர்கள் அனைவரும் தற்போது நாட்டிலேயே தங்கியுள்ளனர்.

புகலிடம் கோருபவர்கள் மேன் முறையீடு செய்வதற்கான செயல்முறை மிக நீண்டதாக இருப்பதால், விமானம் மூலம் வந்த பின்னர் புகலிடம் கோரியவர்களில் 37,913 பேர் தங்களின் அகதி நிலை தீர்மானிக்கப்படுவதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள்.  கடந்த மாதத்தை விட இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமானதாகும்.

Sources SBS Tamil

Back to top button