ஆன்மிகம்

குருபெயர்ச்சியால் கொட்டும் பேரதிர்ஷ்டம்! 2023 ஏப்ரல் வரை 4 ராசிகளுக்கு ராஜயோகம் – Gurupeyarchi 2023

குரு பகவானின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

குரு அல்லது வியாழன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார்.

வியாழன் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு சுப மாற்றம் அசுப பலன்களை தரும்.

அந்த வகையில், இந்த ஆண்டு வியாழன் ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இனி குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் ஏப்ரல் 2023 இல் தான் நடக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், வியாழன் கிரகம் சுமார் ஒரு வருடம் ஒரே ராசியில் இருப்பார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன் அடைவார்கள்.

அதன்படி, எந்தெந்த ராசிகளுக்கு குருவின் அதிர்ஷ்டம் அதிகம் பலன் இருக்கும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

ரிஷபம்:
குரு பகவான் ரிஷபராசியில் 11 ஆவது வீட்டில் நுழைந்துள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

வியாழன் கிரகத்தின் தாக்கத்தால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் சில லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மிதுனம்:
வியாழன் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். வியாழன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாழன் கிரகத்தின் அருளால் ஒரு வருடம் உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். இது வேலை மற்றும் பணிகளுக்கான ஸ்தானமாகும்.

ஆகையால், இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் பின்னோக்கி நகர்வது நல்லதாக அமையும். கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலும் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருந்த காரியம் கைகூடும். நிதி நிலை வலுவடையும். கும்பம் ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்:
உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.

எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது முடிவடையும்.

தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தொழிலில் லாபம் உண்டாகும்.இது தவிர புதிய வேலைகளில் கவனம் செலுத்தி லாபம் ஈட்டுவீர்கள்.  

Back to top button