ஆன்மிகம்

ஆகஸ்டில் ராசி மாறும் சூரியன் புதன் – இந்த ராசியினர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிகொள்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்துக்கான நேரம் அவற்றின் வேகத்தைப் பொறுத்ததாகும்.

அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் கடக ராசியை விட்டு விலகி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரிய பகவான். அதாவது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் தன்னுடைய சொந்த ராசியில் நுழையவுள்ளார்.

இன்னொரு பக்கம் புதன் கிரகம் 22 ஆகஸ்ட் 2022 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார்.

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். சூரியன் மற்றும் புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு ஜோதிடத்தின் படி சூரியன் சிம்ம ராசியில் லக்ன ஸ்தானத்தில் கோச்சாரம் ஆவார். இதனால் செல்வத்தின் கண்ணோட்டத்தில் இந்த ஸ்தானம் மிகவும் சிறப்பான ஸ்தானமாக கருதப்படுகிறது.

தொடர்ந்து, சிம்மத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும்.

நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை திரும்ப பெறுவார்கள். மேலும், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு லக்ன வீட்டில் சூரியன் கோச்சாரம் ஆவதால், இவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தொடர்ந்து, உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் ஏற்படலாம். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணி இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும்.

பின் பணியிடத்தில் மேக் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

மகரம்

மகர ராசியினர்களுக்கு புதன் கோச்சாரம் செய்வது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். முதலீடு செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும். தற்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

Back to top button