ஆன்மிகம்

அடுத்த 140 நாட்கள் புதன், செவ்வாய் ,குருவால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்! யார் யாருக்கு கோடி நன்மை?

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் சிறப்பு வாய்ந்தவை.

கிரகங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தைக் கொண்டுள்ளதால், அவற்றின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

ஜோதிடத்தில் இன்னும் 140 நாட்களில் புதன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்நிலையில் அடுத்த 140 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் பொற்காலமாக இருக்கும். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் வேலை மற்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தந்தைவழி சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணமான தம்பதியர்களின் தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இக்காலத்தில் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். குடும்பச் சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும். வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் அற்புதமான காலமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் பணியிடந்தாலும், அதில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். இதுவரை குடும்பத்தில் பிரச்சனைகள், குழப்பங்கள் இருந்தால், இக்காலத்தில் அனைத்தும் நீங்கி குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அடுத்த 140 நாட்கள் எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரம் செய்து வருபவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வாகனம் அல்லது வீடு வாங்க நினைத்தால், அதற்கான யோகம் இக்காலத்தில் உருவாகும்.

Back to top button