செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை “ஃபேவிபிராவிர்” அறிமுகம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபேவிபிராவிர் என்கிற புதிய மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
* கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய ஃபேவிபிராவிர் என்ற மாத்திரையை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
* இந்த மருந்துக்கு அவசரகால பயன்பாடு  என்பதன்  கீழ், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
* இந்த மாத்திரையை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் 88 சதவீதம் வரை வெற்றி கிடைத்துள்ளது.
* ஒரு மாத்திரை விலை103 ரூபாய் என்றும், மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஃபேவிபிராவிர் மாத்திரையை சர்க்கரை நோய், ஹைபர்டென்ஷன் உள்ள நோயாளிகளுக்கும் கொடுக்கலாம்.
* இந்த மாத்திரை, ஃபேவி புளூ பிராண்டின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும்.
* நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.
* கொரோனா நோயாளிகள், முதல் நாள் மட்டும் 200 மில்லி கிராம் கொண்ட 9 மாத்திரைகளை இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்த 13  நாள்களுக்கு காலையும், மாலையும் 4 மாத்திரைகள் வீதம் எடுத்துக் கொண்டால் போதும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
* இந்த மருந்து ஏற்கெனவே ஜப்பானில், இன்ஃபுளூவன்சா காய்ச்சல்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கும் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
* நேற்று முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்துக்கு, மருத்துவர்கள், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Source : Thanthi tv 

Back to top button