செய்திகள்

இலங்கையர்களுக்கு 550 புதிய USA வேலை வாய்ப்புகள், விவரங்கள் உள்ளே USA jobs for Sri Lankan

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் 550 வேலை வாய்ப்புகளுக்கான உத்தரவை இலங்கை அரசாங்கம் பெற்றுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் (SLFEA) ஒத்துழைப்புடன் இந்த வேலைகள் வழங்கப்படுவதாக Washington DC இல் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தூதுவர் மகிந்த சமரசிங்க புளோரிடாவின் மெசர்ஸ் கார்ம் ஏ சர்வீசஸ் எல்எல்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக Karm a Services மற்றும் SLFEA க்கு இடையே ஒப்பந்தம் செய்து கொண்டார்" என்று தூதரக அறிக்கை கூறியுள்ளது.

குறித்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள் பின்வருமாறு:

250 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் (registered nurses)
100 லேப் டெக்னீஷியன்கள் (lab technicians)
200 நர்சிங் உதவியாளர்கள் (nursing assistants)
இலங்கையர்களுக்கு 550 புதிய USA வேலை வாய்ப்புகள், விவரங்கள் உள்ளே USA jobs for Sri Lankan 1
USA Jobs for Sri Lankans

Back to top button