23ஆம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை : பரீட்சை திணைக்களத்தின் அறிக்கை. G.C.E A/L Exam Time Table 2022
2022 ஜி.சி.இ. உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
நாடு முழுவதும் 2,200 மையங்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் அது தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் 2023 ஜனவரி 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான புகார்களை பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் பதிவு செய்யலாம்.
• Police Headquarters – 011 2421111
• Police hotline – 119
• Examination Department hotline – 1911
• Office of Commissioner-General of Examinations – 0112 785211 / 0112 785212
• School Examination Organizations and Results Branch – 0112 784208 / 0112 784537

