செய்திகள்

மக்கள் ஊரடங்கு எப்படி இருக்கிறது? இந்தியாவில் 315 ஆனது கொரோனா தொற்று

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 315ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை மேற்கோள் காட்டி, ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில், இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.

சென்னை கடற்கரை சாலை
இந்தியாவில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், சென்னை கடற்கரை சாலையின் காட்சி.

படத்தின் காப்புரிமை ANI

இதனிடையே ஊரடங்கு தொடங்குவதற்கு சற்று முன்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, “இன்னும் சற்று நேரத்தில் மக்கள் ஊரடங்கு தொடங்க இருக்கிறது. நாம் எல்லோரும் இதில் பங்கு வகிப்போம்” என்று தெரிவித்து டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.

கடந்த வியாழக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாக்பூர்
நாக்பூர்

படத்தின் காப்புரிமை ANI

மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில் அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தி நகரம்.
மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில் அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தி நகரம்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இன்று மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கிளம்புவதாக இருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Back to top button