(23.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
மேஷம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
கடகம்: குடும்பத்தை விட்டு கொடுத்து போவது நல்லது. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வேற்றுமதந்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.
கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
தனுசு: கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாற்றங்கள் ஏற்படும் நாள்.
மகரம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். நன்மை நடக்கும் நாள்.
கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். வியாபாரத்திற்கு சிலசூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.