செய்திகள்

‘ஏ’ இரத்த வகைகள் கொண்டவர்களை கொரோனா எளிதில் தாக்கும்: ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ்  ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் எளிதாக தாக்கி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை வைத்து வுஹானில் இருக்கும் ஷோங்னான் வைத்தியசாலை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2500 பேரை கொண்டு வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், இரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ இரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ (O) பாசிட்டிவ், ‘ஓபி’(OB) பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.

‘ஓ’ வகை இரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை இரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் இதேபோல் ‘ சார்ஸ் ‘ நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ‘ஏ’ வகை இரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். எனவே ‘ஏ’ இரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Back to top button