செய்திகள்

14 பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

கம்பஹா பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6.00 முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கிரிந்திவெல, நிட்டம்புவ, தொம்பே, மினுவாங்கொடை, கணேமுல்ல,பூகொடை, மீரிகம மற்றும் வெயங்கொட உள்ளிட்ட 14 பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை முன்னதாக கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, வெயாங்கொட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளுக்கு முன்னதாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சலையில் மேலும் 246 தொழிலாளர்கள் கொவிட்-19 க்கு உள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மொத்தம் 567 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Back to top button