செய்திகள்
உலகளவில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற தமிழ் சிறுவன்! லிடியனின் கனவு என்ன தெரியுமா
சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ஸ்ட் பெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் கே. எம். இசைப் பள்ளி மாணவனான அவர் தனது கனவு குறித்து தெரிவித்துள்ளார்.
லிடியனுக்கு இசை ஆல்பங்கள் வெளியிடும் ஆசை உள்ளது. மேலும் இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். முக்கியமாக நிலவுக்கு சென்று அங்கு பியானோ வாசிக்க வேண்டும் என்பதே லிடியனின் கனவு. நிலவில் என்ன வாசிக்க வேண்டும் என்பதை கூட லிடியன் முடிவு செய்துவிட்டார்.
மேலும் இவர் 4 மாத குழந்தையாக இருந்த போதே பியானோவில் இசையமைத்ததாக லிடியனின் தந்தை தெரிவித்துள்ளார்.