செய்திகள்

பல நீண்ட விடுமுறைகள் கொண்ட 2020…!

2020 ஆம் ஆண்டினை வரவேற்க புதிய எதிர்பார்ப்புகளுடன்  அனைவரும் தயாராகிக்கொண்டிருக்கின்றோம். இதேவேளை 2020 ஆண்டு எமக்கு எத்தகைய ஆண்டாக அமையப் போகின்றது என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழலாம்.

புதிய ஆண்டிற்கான நாட்காட்டியை கையில் எடுத்ததும் முதலில் எமது கண்கள் தேடுவது ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை விடுமுறைகள் என்பதை தான். அதிலும் வார இறுதி நாட்களுடன் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்கள் என்றால் பாடசாலை மாணவர் முதல் அலுவலக பணியாளர்கள் வரை கொண்டாட்டம் தான்.

2020 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கின்றது. நீண்ட விடுமுறைகள் அதிகம் காணப்படும் 2020 இல்,

.

பல நீண்ட விடுமுறைகள் கொண்ட 2020...! 1

ஜனவரி மாதத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகின்ற பெளர்ணமி தினம் வார இறுதி தினத்துடன் இணைந்து ஆண்டின் முதலாவது நீண்ட விடுமுறையை தருகின்றது.

அதனை தொடர்ந்து பெப்ரவரி மாதம் வார இறுதியுடன் ஆரம்பமாகி தேசிய தினத்துடன் ஒரு நீண்ட விடுமுறையை வழங்குகின்றது.

மார்ச் மாதத்தின் 09 ஆம் திகதி ஒரு பெளர்ணமி தினம் என்பதால் 07, 08, 09 என வார இறுதி விடுமுறையுடன் இணைகின்றது.

ஏப்ரல் மாதம்  சித்திரை வருடப்பிறப்புடன் அதிக விடுமுறையைக் கொண்ட மாதமாகும், இவ்வருடம் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ஒரு அரச விடுமுறையையும் ஒரு வங்கி விடுமுறையையும் தருகின்றது. அதேவேளை, இரண்டாம் வாரத்தில் வங்கி விடுமுறை, அரச விடுமுறை, வார இறுதி விடுமுறை என்பன இணைந்து 10 தொடக்கம் 14 வரை நீண்ட விடுமுறையை வழங்குகின்றது.

மே மாதம் ஏப்ரல் மாதத்தை மிஞ்சும் வகையில் நீண்ட விடுமுறையை கொண்டுள்ளது. மே 01 தொழிலாளர் தினம் வெள்ளிக்கிழமை என்பதால் வார இறுதி நாட்களுடன் இணைகின்றது.  அதேபோல் 07, 08 ஆம் திகதிகள் வெசாக் தினக் கொண்டாட்டமாகவும் அதனுடன் இணையும் வார இறுதி நாட்கள் வருடத்தின் மிக நீண்ட விடுமுறையை வழங்குகின்றது.

25 ஆம் திகதி வருகின்ற ஈகைத் திருநாள் திங்கட்கிழமை என்பதால் இவ் விடுமுறையுடன் வார இறுதி விடுமுறைநாட்கள் இணைகின்றன.

ஜூன் மாதத்தில் முதலாவது வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி தினம், வார இறுதி விடுமுறை நாட்களுடன் இணைகின்றது. அதே போன்று ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரும் பௌர்ணமி தினமும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் இணைந்து வரும் மிலாதுன் நபி தினமும் மாதங்களின் விடுமுறை நாட்களை அதிகரிக்கின்றன.

இறுதியாக டிசெம்பர் மாதத்தில், வெள்ளிக்கிழமை வருகின்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம் வார இறுதியை வண்ணமயமாக்குகின்றது. அதனை தொடர்ந்து 29  ஆம் திகதி பௌர்ணமி விடுமுறை இணைவதால் வருட இறுதி மேலும் மகிழ்ச்சியை தருகின்றது எனலாம்.

எனவே வருடத்தின் விடுமுறைகளை சரியாக திட்டமிட்டால் 2020 ஆம் ஆண்டு முழுதும் கொண்டாட்டங்களுடன் இணையலாம் என்பதில் ஐயமில்லை…

பல நீண்ட விடுமுறைகள் கொண்ட 2020...! 2

Back to top button