செய்திகள்
8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு, 2 மணிவரை தளர்த்தப்பட்டுள்ளது
கொரோனாவால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம், இன்று காலை(24.03.2020) தளர்த்தப்பட்டு, நண்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுவதுடன், இவ்வூரடங்குச் சட்டம், 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.