செய்திகள்

சினிமா பார்க்க செல்லலாம்; Gym செல்லலாம்; ஆனால்…

Australia : பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்கலாமே தவிர சினிமா பார்க்க செல்வது, Gymக்கு செல்வது, ரயில் பயணம், பேருந்து பயணம் போன்ற அம்சங்களை  மக்கள் தொடர்ந்து செய்யலாம் என்று நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி (chief medical officer) Dr. Brandan Murphy கூறினார். சினிமா பார்க்க செல்வது, Gymக்கு செல்வது, ரயில் பயணம், பேருந்து பயணம் போன்றவற்றால் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு மிகக் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.  மேலும் பொதுமக்கள் எப்படி பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தவேண்டும் என்று பலவித நடைமுறைகளை தாம் இந்த வாரத்தில் அறிவிப்போம் என்று  Dr. Murphy கூறினார்.

ஆஸ்திரேலியா இதுபோன்ற தொற்றுநோய் வேகமாக பரவும் சூழலை இதற்குமுன் சந்தித்ததில்லை என்றும் எனவே நலத்துறை வல்லுனர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளின்படி அரசு திட்டங்களை வகுக்கும் என்றும் பெடரல் நலத்துறை அமைச்சர் Greg Hunt கூறினார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 256 ஆகும். மாநிலவாரியாக இந்த எண்ணிக்கையைப் பார்ப்போம்:

NSW: 112

Vic: 57

Qld: 46

SA: 19

WA: 14

Tas: 6

NT: 1

ACT: 1

மொத்தம்: 256

SOURCE SBShttps://www.sbs.com.au/language/tamil/coronavirus-update

Back to top button