நெற்றியில் திருநீறு அணிவதன் முக்கியத்துவம்
மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது, அதிக அளவிலான சக்தியை வெளியிடவும், உள்ளீர்க்கவும் முடிகின்றது.
திருநீறை மூன்று கோடுகளாக அணிவதற்கான காரணம், மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து நிர்மூல நிலையினை அடைவதற்கு என, முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை ஆகிய மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில், அருள் அனுபவம் பெற்றவர் என்பதையும் இது உணர்த்துகின்றது.
இவற்றையும் விட, புருவ நடுவின் மேல் நெற்றியின் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே திருநீறு அதிகமாக இடப்படுகின்றது.
நெற்றியில் பட்டை போட உதவும் மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பலாக போவதே உறுதி என்பதை இது தெளிவாக குறிக்கின்றது.