செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா?
சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.
பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து வணங்கினால் சனி தோஷம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் சிறப்பு
- புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.
- புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
- திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
- துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
விரதம் இருப்பதால் உண்டாகும் நன்மைகள்
- திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
- சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.
- பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
- புரட்டாசி சனிக்கிழமையில் திருமாலை வணங்கி வந்தால் நன்மை சுற்றி உள்ள திமைகள் முற்றிலும் அகலும்.