செய்திகள்
இறுதி பேரழிவை நெருங்கிய பூமி? சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்!
ஜப்பானின் வடமேற்கு கடற்கரை பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஜப்பானிய மக்கள் பீதியடைந்து போல் இறந்த ஓர் மீன்களின் சகுனம் உண்மையானது.
ஜப்பானின் மையப்பகுதியில் சுனாமி
யமகட்டா கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் நிகாடா பகுதியில் அதிகப்படியாக 7 ரிக்டர் அளவிலும், மற்ற சுற்றுப்பகுதிகளில் 6 ரிக்டர் அளவுக்கு மேலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் மையப்பகுதிக்கு அருகில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3.3 அடி உயரத்திற்குச் சுனாமி அலைகள்
யமகட்டா மற்றும் நிகாடா பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு,அதாவது 3.3 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதி மக்கள்அனைவருக்கும் சுனாமி எச்சரிக்கை வழங்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரவு 11.05 மணி அளவில் நிகாடா கடலோர பகுதியில் மிதமான சுனாமி பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் மீன் சகுனம்!
கடந்த மாதம் ஜப்பான் கடலோர பகுதிகளில் ஓர் மீன்கள் கரை ஒதுங்கி இறந்து கிடந்த சம்பவம், ஜப்பான் மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருந்தது. ஜப்பான் அல்லது பூமி மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கப் போகிறதென்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டடு வந்தது. ஓர் மீன்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் பதட்டம் மற்றும் பீதியுடன் கவலை கொண்டிருந்தனர்.
பீதியிலிருந்த மக்களுக்குச் சுனாமி எச்சரிக்கை
கடலோர பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி, அரசாங்கம் விரைவில் உத்தரவிடக் கூடும் என்று தகவல்கள் கடந்த மாதம் வெளியாகியது. பீதியிலிருந்த ஜப்பான் மக்கள் எதிர்பார்த்தது போலவே, தற்பொழுது ஜப்பானைச் சுனாமி தாக்கியுள்ளது. அப்படியானால் ஜப்பான் புராணங்களில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை தானா என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
ஜப்பானியப் புராணங்களின் கூறப்பட்டது என்ன?
ஜப்பானியப் புராணங்களின் படி இறந்த ஓர் மீன்களைக் கடலுக்கு வெளியில் காண்பது கெட்ட சகுனமாக நம்பப்படுகிறது. ஓர் மீன்கள் ஆழ்கடலில் வாழும் ஒரு மீன் இனம் ஆகும். இவ்வகை மீன்கள் சுமார் 3000 அடி ஆழத்தில் கடலின் ஆழ்கடலில் இருட்டில் மட்டுமே வாழும் உயிர் வகை என்பது குறிப்பிடத்தக்கது.
3000 ஆடி ஆழத்தில் வாழும் மீன்களுக்குக் கரையில் என்ன வேலை?
இந்த ஆழ்கடல் மீன்களைக் கடலுக்கு அடியில் காண்பதே அரிது என்று கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களாய் ஜப்பானியக் கடல் கரைகளில், ஓர் மீன்கள் அதிக அளவில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்கடலில் வாழும் இவ்வகை மீன்கள் ஏன் 3000 ஆடி ஆழத்திற்கு மேல் வந்து, கரையில் இறந்து காணப்பட வேண்டுமென்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்திருந்தது. ஜப்பான் புராணத்தில் கூறப்பட்டுள்ள காரணமே இதற்கான பதில் என்பதை மக்கள் முழுவதுமாய் நம்புகின்றனர்.
பூமியில் சுனாமி அல்லது பேரழிவு நிச்சயம்
ஓர் மீன்கள் கரையில் காணப்பட்டால், சுனாமி, நிலநடுக்கம் அல்லது ஏதேனும் பேரழி நிகழும் என்று ஜப்பானியப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஜப்பானியக் கலாச்சாரத்தின்படி, ஜப்பானிய மக்கள் இதைப் பெரிதும் நம்புகின்றனர். கடந்த மாதம் ஓர் மீன்கள் அதிக அளவில் கரையில் காணப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பேரழிவு பற்றித் தெரியுமா?
ஜப்பானியப் புராணத்தை ஏன் உள்ளூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என்பதற்கான வலுவான காரணம் ஒன்று உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில், டோக்கியோ பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 9 ஆகப் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது, குறைந்தபட்சம் ஒரு டஜன் ஓர் மீன்கள் இஷிகாவா ப்ரீஃபெக்சர், டோயாமா ப்ரீஃபெக்சர் மற்றும் கியோடோ, ஷிமேன் மற்றும் நாகசாகி பகுதிகளில் காணப்பட்டது. சுனாமி தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த ஓர் மீன்கள் இறந்து கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சில தினங்களில் 19,000ற்கும் மேற்பட்ட மக்கள் பலி
கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பூகம்பமாக, டோக்கியோவில் நிகழ்ந்த பூகம்பம் பதிவு செய்யப்பட்டது. இந்த பூகம்பத்திற்கு சுமார் 19,000ற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பதும், ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சில தினங்களுக்குப் பின்பு தான், இந்தப் பேரழிவு சுனாமியைத் தொடர்ந்து வந்தது என்பதும் தான் மிகப் பெரிய உண்மை.
பேரழிவின் போது வித்தியாசமாக நடந்துகொள்ளும் விலங்குகள்
பூகம்பம் அல்லது பேரழிவுகள் நிகழும் முன்பு, விலங்குகள் வித்தியாசமாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் பலவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 373 பி.சி. காலகட்டத்தில், குளிர்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி ரோம எழுத்தாளர் கிளாடியஸ் ஏலியானஸ் தனது பத்திரிகையில் கூறியிருப்பது, “பண்டைய கிரேக் ஹெலிகே நகரத்தில் நிகழ்ந்த பூகம்பத்திற்கு முன்பாக கொறித்துண்ணிகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் பூகம்பம் நிகழ்வதற்கு முன்னர் நாள் இரவு அனைத்து விலங்குகளும் நகரத்தைவிட்டு வெளியேறியதென்று” பதிவு செய்துள்ளார்.
1975 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பேரழிவில் மக்கள் தப்பித்தது எப்படி?
1975 ஆம் ஆண்டில், சீனாவின் தலைநகரான ஹைசெங் நகரிலிருந்து ஒரு மில்லியன் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். லைனோனிங் மாகாணத்திலிருந்த விலங்குகள் வித்தியாசமாக நடந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில தினங்களில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டது. சரியான நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படத்தினால் பெரிய அளவிலான உயிர்ச் சேதம் அந்த நேரத்தில் தடுக்கப்பட்டது.
ஓர் மீன்களின் சகுனம் உண்மையானது
ஜப்பானியப் புராணத்தின்படி ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சில தினங்களில், தற்பொழுது ஜப்பான் பகுதியில் சுனாமி தாக்கியுள்ளது. இறந்த ஓர் மீன்கள் பற்றிய சகுனம், தற்பொழுது உண்மை என்று உறுதியாகியுள்ளது. மிதமான சுனாமி மட்டும் நிலநடுக்கம் ஜப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்னும் சில தினங்களுக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.