செய்திகள்
		
	
	
ஈரமில்லாத ரோஜா
 பூம்பாவை நீ
 பூப்பறித்த போது
 உன் கூந்தலுக்கு சூட என்று
 நினைத்தேன்.
 கையில் தீபமேந்தி
 கானமயிலாய் நீ வந்த போது
 வீட்டுக்கு ஒளியேற்றும்
 திருமகள் என்று நினைத்தேன்.
 இவற்றோடு நீ
 கல்லறை சென்ற போது தான் 
 என் இதயம் சொல்லியது
 நீ ஒரு ஈரமற்ற ரோஜா என்று.
					
