ஆன்மிகம்

கிருத்திகை நட்சத்திரகாரர்களே! தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க இதை செய்தாலே போதும்

கிருத்திகை நட்சத்திரகாரர்களே! தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க இதை செய்தாலே போதும் 1

கிருத்திகை நட்சத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவதாகும்.
இந்த நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவானும் தமிழர்களின் கடவுளான முருக பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இது விளங்கின்றது.
கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம்.
இதில் கிருத்திகை நட்சத்திரதத்தின் தரிசனத்தை மார்கழி மாதத்தில் வானில் அனைவரும் காண முடியும் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்ல பலன்களை பெறவும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எளிய பரிகார முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பாரப்போம்.
  • கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
  • கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக இருக்கும் அத்தி மரம் இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்களை பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.
  • எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம்.
  • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும்.
  • கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
கிருத்திகை நட்சத்திரகாரர்களே! தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க இதை செய்தாலே போதும் 2

Back to top button