செய்திகள்

இன்றைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள்!! வடக்கு – கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு..

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் இன்றைய புதன்கிழமைய வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”21ஆம் திகதி யேசு கிறிஸ்து உயிர்த்த நாளில் ஈஸ்ட்ர் கொண்டாட்ட நாளில் கொழும்பிலும், சுற்றுப் பிரதேசங்களிலும், மட்டக்களப்பிலும் தற்கொலைக் குண்டுதாரிகளினாலும் ஏனைய இடங்களில் மர்மமான முறைகளிலும் கிறிஸ்துவ தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் குறிவைத்துப் பயங்கரக் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
நூற்றுக்கணக்கான இலங்கை மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டும், காயமடைந்தும் தீவிர சிகிச்சைக்கு ஆளாகியும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, மனிதாபிமானமிக்க மனிதர்கள் ஒன்றாக ஒற்றுமையாக எம் கண்டனத்தை வெளிப்படுத்துவோம்.
இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.அவலத்தில் வீழ்ந்து இழப்புக்களால் துயருறும் மக்களுடன் நாம் அவர்கள் கண்ணீரில் கலந்து துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு 2019.04.24 ஆம் நாள் வடக்கு – கிழக்கில் துக்க நாளாகக் கடைப்பிடிப்போம்.
இன்றைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள்!! வடக்கு - கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு.. 1

அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைக்கின்றோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button