செய்திகள்

பல இயக்குனர்களின் நல்ல வாழ்க்கைக்கு உதவியதே விஜய் தான்- யாருக்கும் தெரியாத சம்பவம் கூறிய இயக்குனர்

பெரிய இடத்திற்கு வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் விஜய்.
இவரை பற்றி பிரபலங்கள் பலரும் பேசுகிறார்கள், அந்த வகையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தவர் பேரரசு.
இவர் விஜய்யை பற்றி ஒரு பேட்டியில், ஆரம்ப காலத்தில் தனக்கு உயர்வை தேடிக்கொடுத்த யாரையும் விஜய் மறக்கவில்லை, அமைதியான சுபாவம் கொண்டு இப்போதும் இருக்கிறார்.
நிறைய உதவிகள் செய்கிறார், உதாரணத்துக்கு, வறுமையில் வாடும் வயதான இயக்குனர்களுக்கு, இயக்குனர்கள் சங்கம் சார்பில் பென்ஷன் வழங்குவதற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார். இதற்காக இயக்குனர் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்கியிருக்கிறார்.
பண உதவி செய்ததோடு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.
பல இயக்குனர்களின் நல்ல வாழ்க்கைக்கு உதவியதே விஜய் தான்- யாருக்கும் தெரியாத சம்பவம் கூறிய இயக்குனர் 1

Back to top button