செய்திகள்
		
	
	
அஜித் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது- ரசிகர்களுக்கான அடுத்த கொண்டாட்டம்
அஜித்தின் விஸ்வாசம் தான் இந்த வருட முதல் ஹிட். படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் இப்போதும் மாஸ் வேட்டை நடத்தி வருகிறது.
50வது நாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துவிட்டது, அடுத்து 75வது நாளோ இல்லை 100வது நாள் கொண்டாட்டம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு கடந்த மார்ச் 1ம் தேதி வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
வரும் மார்ச் 7ம் தேதி கன்னடத்தில் Jaga Malla என்ற பெயரில் படம் அங்கு வெளியாக இருக்கிறதாம். இதற்கு முன் கன்னடத்தில் வெளியான அஜித் படங்களுக்கு நல்ல விமர்சனம், வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

					