செய்திகள்
கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சி தகவல்!
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 39 நாடுகளுக்கு இலவச on arrival visa முறையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறையை மிகவும் இலகுவாக்கும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பணிகள் இலங்கைக்கு இலவசமாக வரும் விதமாக புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக on arrival visa முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சுற்றுலா துறையில் ஏற்படும் முன்னேற்றம் ஆராய்ந்ததன் பின்னர் தொடர்ந்தும் முன்னெடுப்பதா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம், கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துகல், ரோமானியா, சிலோவேனியா ஆகிய நாடுகள் on arrival visa மூலம் இலகுவாக இலங்கைக்கான சுற்றுலா விசாவை பெற்றுக்கொள்ள முடியும்.