செய்திகள்
பஸ் வண்டிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு புதிய வரையறை
போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் ஒலிக்கின்ற பாடல்களையும், அவற்றின் சத்தத்தையும் வரையறைக்குட்படுத்தப்படும் விதிமுறைகள் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடல்கள் இசைக்க விடப்படும் சத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய டெசிபள் மட்டங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதற்காக எத்தகைய பாடல்களை பஸ் வண்டிகளில் ஒலிக்க விடலாம் என்பதை தெரிவுசெய்வதற்காக கலைஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகளை முறையாக அமுல்படுத்த தவறும் நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.