செய்திகள்

ட்ரம்பின் முகமூடி அணிந்து திருடர்கள் கை வரிசை

அஸ்திரேலியாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முகமூடி அணிந்து கடைகளில் திருடிய திருடனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்ரம்பின் முகமூடி அணிந்து திருடர்கள் கை வரிசை 1
அஸ்திரேலியாவில் திருடன் ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போன்ற முகமூடியுடன் கடைகளில் திருடியுள்ளதாகவும்,ஸ்ட்ராத்பைன் பகுதி கடைத் தெருவிற்குள் ட்ரம்ப் முகமூடியுடன் நுழைந்த திருடன் கடையின் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த கை கடிகாராகங்கள் அருகில் இருந்த இலத்திரணியல் கடையில் சில பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக  அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இவை அனைத்தும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளது.இதில் கடையில் இருந்து வெளியே வரும் போது கையில் இருந்த பொருள் கீழே விழவே அதை எடுக்க குனிந்த போதுமுகமூடி கீழே விழுந்தது. 
இதனையடுத்து அந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button