செய்திகள்

தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ !

தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 1
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 2
இந்நிலையில் குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
அத்துடன் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இலங்கையிலுள்ள இரு பயங்கரவாத அமைப்புக்கள் செயற்பட்டுள்ளதாகவும் 9 தற்கொலை தாரிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அதிலொருவர் பெண் அடங்குவதாகவும் இரு தற்கொலைதாரிகளில் ஒருவர் லண்டலில் பட்டப்படிப்பையும் மற்றையவர் அவுஸ்திரேலியாலிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளரெனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 3
தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் காணொளிகள் சர்வதேச ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அடங்குகின்றனர். அதிலொரு தற்கொலை குண்டுதாரியின் மனைவி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலைசெய்து உயிரை மாய்த்துள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 4
வாசனைத் திரவிய வர்த்தகரின் செல்வந்த குடும்பத்தில் பிறந்த இரண்டு புதல்வர்களே கொழும்பின் பிரதான ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 5
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.எஸ். அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு தாக்குதல்களை ஏற்படுத்தி இலங்கையில் சுமார் 1000 பேர் வரையில் கொலைசெய்யவும் காயப்படுத்தவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ ! 6
தற்கொலைத் தாக்குதலில் உபைதா, அல்-முக்தர், ஹலீல், ஹம்ஷா, அல்-பரா, முஹம்மட், அப்துல்லா ஆகிய 7 பேர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஹம்ஷா என்ற தற்கொலைதாரி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில்  தற்கொலைத்தாக்குதலையும் கலீல் என்ற தற்கொலை தாக்குதல்தாரி நீர்கொழும்பு புனித செபஸ்ரியன் ஆலயத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹமட் என்ற தற்கொலைதாரி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Back to top button