செய்திகள்

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி !

இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா – 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.


ராவணா -1  என்ற செய்மதி சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து குறித்த செய்மதியை ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் முதலாவது செய்மதி 'இராவணா 1" விண்ணுக்கு ஏவப்பட்டது
குறித்த ராவணா – 1 என்ற செய்மதி 1000 சென்றி மீற்றர் நீளமுடையதும் 1.1 கிலோகிராம் நிறையுடையதுமாகும்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் ஏனைய உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் முதன்முறையாக செய்மதியொன்றை விண்ணுக்கு ஏவி வரலாற்று சாதனைபடைத்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி ! 1

Back to top button