இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பலவீனம் காணமாக மக்களின் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகளவு நீர் அருந்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த காலநிலை மேலும் அதிகாரிக்க கூடும் என்பதனால் அதிக வெப்ப நிலை அதிகரிக்கும். வெளி இடங்களில் பயணிக்க வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெளி இடங்களுக்கு செல்லும் போது அதிக அவதானம் செலுத்துமாறு திணைக்களத்தின் பிரதி இயக்குனர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக சூரிய ஒளி படும் வகையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் நீண்ட நேரம் தங்கியிருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறு பிள்ளைளை வாகனங்களுக்குள் விட்டுச் செல்வதை தவிர்க்குமாறும் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.