செய்திகள்

சனி விட்டாலும் ராகு விடாது..? யாரை எல்லாம் ஆட்டிப்படைக்க போகின்றது???

ஜோதிடம் என்பது வானவியலின் ஒரு பகுதியாகும். வானவியல் முடியும் இடத்தில் இருந்துதான் ஜோதிட சாஸ்த்திரமே தொடங்குகிறது என்று கூறலாம்.
சூரியனும் அவற்றை சுற்றியுள்ள கிரகங்களும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் முன்கூட்டியே கணிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம் ஆகும்.
ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சக்தியும், அடையாளமும் இருக்கும். அந்தந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்கேற்றாற் போல உங்கள் வாழ்க்கையில் நல்லவையும், கெட்டவையும் நடக்கும்.
சில கிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், முன்னேற்றம் என அனைத்தையும் வழங்கும், சில கிரகங்களோ துன்பங்கள், வீழ்ச்சி, நஷ்டம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இது அனைத்தும் அந்த கிரகங்கள் உங்கள் ஜாதத்தின் எந்த வீட்டில் இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். இந்த பதிவில் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயத்தையும் பார்க்கலாம்.
சூரியன்
சூரியன்தான் அனைத்து மனிதர்கள் மற்றும் கிரகங்களின் ஆணிவேராகும். கிரகங்களின் அரசன் என்று கூட இதனை சொல்லாம். ஒருவரின் வெளிப்புற தோற்றம், தன்னம்பிக்கை, நடந்து கொள்ளும் விதம், தலைமைப்பண்பு என அனைத்தையும் தீர்மானிப்பது சூரியன்தான். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் அரசாங்க பணியில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
சந்திரன்
சந்திரன் ஒருவரின் மனதை பிரதிபலிப்பதாகும். ஒருவரின் சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பங்கள் அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை பொறுத்து இருக்கும். சந்திரன் ஒரு மென்மையான கிரகமாகும் எனவே இது மற்றவர்களுடன் பழகும்விதம், தொழில்ரீதியான உறவுகள், அம்மாவின் ஆரோக்கியம் போன்றவற்றை குறிக்கும். உங்கள் ஜாதகத்தை பார்க்கும்போது அதில் சந்திரனின் நிலையை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
செவ்வாய்
செவ்வாய் கிரகமானது ஒரு ஆண்பால் கிரகமாகும். இது ஒருவரின் ஆற்றலுடன் தொடர்புடையது ஆகும். ஒருவரின் போட்டி மனப்பான்மை, அவர்களின் மூர்க்கத்தனம் என அனைத்தையும் தீர்மானிப்பது செவ்வாய்தான்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அவர்கள் உயர் பதவிகளிலோ அல்லது அதிக சொத்துக்கள் உடையவர்களாகவோ இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உடனான உறவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைத்தான் ஆராயவேண்டும்.
செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அவர்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக ஆற்றலை செலவழிப்பார்கள்.பொதுவாக செவ்வாய் கிரகம் அழிவை ஏற்படுத்தும் கிரகமாகும்.
புதன்
புத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பது புதன் கிரகத்தின் பணியாகும். புத்திகூர்மை மிக்கவர்கள், பேச்சாற்றல் அதிகம் உள்ளவர்கள், படிப்பில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் போன்றவர்களை நன்கு கவனித்தால் அவர்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.
புதனின் பார்வை உள்ளவர்கள் விளையாட்டுத்தனம் அதிகம் உள்ளவர்களாகவும், அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை பேசியே சமாளிப்பது எப்படி என்பது இவர்களுக்கு நன்கு தெரியும், இவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
குரு
வியாழன் அல்லது குரு மிகவும் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் குரு வந்துவிட்டால் அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகள் அவர்களை தேடிவரும்.
திடீர் முன்னேற்றம் அடைந்தால் அவர்கள் ஜாதகத்தில் குருவின் தாக்கம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். குருவின் தாக்கம் உள்ளவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைபெற்றிருக்கும்.
சுக்கிரன்
சுக்கிரனும் உங்கள்குக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய கிரகம்தான். இது ஒருவரின் பாலியல் திறன், வாழ்க்கைத்துணை, ஆடம்பரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கிரகமாகும்.
சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். சுக்கிரனின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் வசீகரமாகவும், மற்றவர்கள் எளிதில் விரும்பக்கூடியவர்களாகவும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமானவர்களாகவும் இருப்பார்கள்.
சனி
அனைவரும் கண்டு பயப்படும் ஒரு கிரகம் என்றால் அது சனிகிரகம்தான். ஏனெனில் சனிபகவான் ஒருவரை பார்க்க தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. நாம் செய்த பாவங்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுப்பதுதான் சனி கிரகத்தின் பணியாகும்.
ஆனால் நம்மை நல்ல காரியங்களை செய்ய தூண்டுவதற்கும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருக்கொடுப்பதற்கும் சனியின் பார்வை மிகவும் அவசியமானதாகும்.
ராகு
சனியை போலவே இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய கிரகமாகும். காரணமில்லாத எரிச்சல், கோபம், மோசமான பழக்கவழக்கங்கள், சுத்தமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணம் இந்த கிரகத்தின் பார்வைதான்.
உங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் ராகு இருந்தால் உங்கள் வேலையில் பெரிய நஷ்டம் ஏற்படும், அதேபோல ஏழாவது வீட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும். சூரியன் மற்றும் சந்திரனை தாக்கி கிரகணத்தை ஏற்படுத்தும் கெட்ட கிரகம் இதுதான்.
கேது
ராகுவும், கேதுவும் நிழலும் நிஜமும் போன்ற கிரகங்களாகும் ஏனெனில் இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய கிரகம்தான். சொல்லப்போனால் ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடிய கிரகமாகும்.
கேது ஒருவரின் முன்னேற்றத்திற்கு தடை விதித்து அவர்களின் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்தும். இயற்கையாகவே ராகுவும், கேதுவும் அழிக்கும் கிரகங்களாகும்.
சனி விட்டாலும் ராகு விடாது..? யாரை எல்லாம் ஆட்டிப்படைக்க போகின்றது??? 1

Back to top button