செய்திகள்

Corona Update Sri lanka : கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 337 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளனர். அந்தவகையில் பொரள்ளை , வெல்லம்பிட்டி , மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பபட்டுள்ளனர்.

(24.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope

எனினும் கொழும்பில் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் 7,226 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு கம்பஹா மாவட்டத்தில் இதுவரை  5,391 தொற்றாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 776 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு

நாட்டில் பாதிவாகிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,508 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 337 கொரோனா தொற்றாளகர்களின் எண்ணிக்கையில் 335 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை பேணியவர்வளாவர்.

இதுவரையில் மினுவாங்கொட , பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 16,978 ஆக அதிகரித்துள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு?..

இந்நிலையில்  5,921 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதோடு , 14,497 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

எனினும் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source
Virakesari
Back to top button