செய்திகள்
பிரித்தானியாவில் தொழில் செய்ய விரும்புவோருக்கு முக்கிய தகவல்!
பிரித்தானியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் அடுத்தாண்டு முதல் இந்த நடைமுறை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறினாலும், மாற்றங்கள் கொண்டு வருவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நடைமுறையில் உள்ளது.
இதன்படி, அடுத்தாண்டு முதல், அனைத்து தொழிலாளர்களும் பிரித்தானியாவில் தொழில் செய்ய போதுமான புள்ளிகளைப் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கிலம் பேசவும், உறுதியான வேலை வாய்ப்பைக் கொண்டிருத்தல், சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.