ஆன்மிகம்

(17.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope

17.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

மேஷராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக் கும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாளை முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைப் பெரிதும் குறைத்துக்கொள்ளலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட் டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுத லாக இருக்கும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெரு மானை வழிபடுவதால் பயணங்கள் சாதகமாக முடியும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் தேவை. அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னிராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்கினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி அன்பர்களே!

இன்று எதிலும் வெற்றியே கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு அளவற்ற நன்மைகளைத் தருவதாக இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்க நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். ஷீர்டி சாய்பாபாவை வழிபட்டு நாளைத் தொடங்கினால் பல வகைகளிலும் அனுகூலம் உண்டாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்கு வதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அரசவிடுமுறை நீடிப்பு- அத்தியாவசிய சேவைகள் இயங்கும்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி? – Coronavirus: Safety and Readiness Tips for You

கொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்

Back to top button