ஆன்மிகம்

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.02.2020 )..!

28.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி பஞ்சமி
நட்சத்திரம் அசுவினி
யோகம் அமிர்தயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் உத்திரம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

மேஷராசி அன்பர்களே! – Daily Horoscope

உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபராசி அன்பர்களே! – Daily Horoscope

தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனராசி அன்பர்களே! – Daily Horoscope

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவ லகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடகராசி அன்பர்களே! – Daily Horoscope

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இரவு நேரத்தில் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மராசி அன்பர்களே! – Daily Horoscope

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மற்றவர்களு டன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும் என்பதால் பொறுமையை கடைப்பிடிக் கவும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களைக் கடிந்துகொண்டாலும், பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னிராசி அன்பர்களே! – Daily Horoscope

மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர் களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

துலாராசி அன்பர்களே! – Daily Horoscope

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகராசி அன்பர்களே! – Daily Horoscope

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவல கத்தில் சக ஊழியர் களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.

தனுசுராசி அன்பர்களே! – Daily Horoscope

இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளை களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரராசி அன்பர்களே! – Daily Horoscope

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்..

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே! – Daily Horoscope

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப் படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே! – Daily Horoscope

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

குருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம்! திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்? அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் – Guru peyarchi -March

சனியோடு உச்சம் பெறும் செவ்வாய்! ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்!

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?

 

Back to top button