ஆன்மிகம்

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.03.2020 )..!

02.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் திங்கள்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் திங்கள்கிழமை
திதி சப்தமி காலை 9.14 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் ரோகிணி
யோகம் அமிர்தயோகம்
ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம் காலை 6.30 முதல் 7.30 வரை/ பகல் 4.30 முதல் 5.15 வரை
சந்திராஷ்டமம் சுவாதி
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்

 

மேஷராசி அன்பர்களே!

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பிரச்னை எதுவும் ஏற்படுவதற்கில்லை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரிஷபராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கவனம் அவசியம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

மிதுனராசி அன்பர்களே!

பரபரப்பாகச் செயல்படுவீர்கள். காலையிலேயே கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைக்கக்கூடும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

கடகராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், உடல் நலனில் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கக்கூடும். அதிகாரிகள் அனுசர ணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

சிம்மராசி அன்பர்களே!

நண்பர்களின் ஆதரவால் எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுக எதிரிக ளின் தொல்லைகள் விலகும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்கள் விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

கன்னிராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செல வுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஆனால், மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023.. உத்தியோஸ்தர்களுக்கு எப்படி இருக்க போகிறது?.. – Sani Peyarchi 2020

துலாராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நினைத்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மற்றவர் களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு களை துணிந்து எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் களால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் கிடைக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் நீண்டநாளாக தடைப்பட்டு வந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடு வதைத் தவிர்க்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகளுடன் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கக்கூடும். அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் நீண்டநாள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள் வதையும் தவிர்க்கவும்.

குருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம்! திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்? அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் – Guru peyarchi -March

சனியோடு உச்சம் பெறும் செவ்வாய்! ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்!

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?

 

Back to top button