சாதனை நாயகன் Elon Musk History in Tamil! – வாரம் ஒரு வரலாறு
வாரம் ஒரு வரலாறு - ஓவ்வொரு புதன் கிழமையும் எதிர் பாருங்கள்
Elon musk, Silicon Valley-க்கு வரும் முன்னரும், மோட்டார் வாகனங்கள் இருந்தன. ஆனால் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் கார்கள் என்பது சாத்தியம் என்பதையோ, பெட்ரோலில் இயங்கும் வாகனத்தைவிட வேகத்தையும் சொகுசையும் நேர்த்தியையும் electric cars தரும் என்பதையோ, அல்லது electric cars தான் car of the future- ‘வருங்கால வாகனம்’ என்பதையோ, பிரபல மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு electric car களை உற்பத்தி செய்யத் தொடங்குவார்கள் என்பதையோ யாரும் அதற்கு முன்னர் ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. Next generation of cars – அடுத்த தலைமுறைக்கான கார் பற்றி தான் கண்ட கனவை மெய்ப்பட வைத்தவர் Elon Musk.
Elon Musk, CEO of SpaceX and Tesla.AAP
Elon Musk இற்கு முன்னரும் விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ‘விண்வெளிக்குச்சென்ற ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பிவந்து car park இல் வண்டியை நிறுத்துவது போல கச்சிதமாக வந்து சேரும்; அந்த ராக்கட் சுமந்து சென்ற விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையில் – கடலில் அல்ல -தரையில் இறங்கும் . ராக்கட்டையும் விண்கலத்தையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்ல, வல்லரசுகள் பல கோடி டாலர்களைச் செலவழித்து விண்வெளிப்பயணங்களை மேற்கொள்வதைவிடச் சிறப்பாக சில லட்சங்களை வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்களால் இதைச்செய்யமுடியும்’ என்றெல்லாம் யாரும் நம்பத்தயாராக இருக்கவில்லை. பாரதி சொன்னது போல ‘சில வேடிக்கை மனிதர்கள் போல் வீழ்வேன் என நினைத்தாயோ’ என்று சவால்விட்டு, நிரூபித்துக் காட்டியவர் Elon Musk.
‘Fossil fuels என்ற கனிம மற்றும் புதுப்பிக்கப்பட முடியாத வளங்களால் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்திற்கு மாற்றாக வேறு எந்தச்சக்தியையும் ஆலைகளிலோ, வீடுகளிலோ வெற்றிகரமாக பயன்படுத்த முடியாது’ என்பதும் பல காலமாக நம்ப ப்பட்டு வந்த ஒன்று. Solar City என்ற தனது நிறுவனத்தின் மூலம் காலங்காலமாக நிலவிவந்த எதிர்மறையான நம்பிக்கைகளை முறியடித்தவர் Elon Musk.
SpaceX CEO Elon Musk celebrates the successful launch of a Falcon 9 rocket with the Crew Dragon spacecraft.AAP
Tesla நிறுவனத்தின் CEO, Space X ராக்கட் நிறுவனத்தின் CEO, Boring Co நிறுவனத்தின் CEO, Neuralink நிறுவனத்தின் CEO, Solar City நிறுவனத்தின் Chairman, இதைத்தவிர X Com நிறுவனத்தின் Chairman,Open Artificial Intelligence ஆய்வுகூடத்தின் ஸ்தாபகர், Zip 2 நிறுவனத்தின் ஸ்தாபகர் என்ற வகையில் இவையனைத்தும் சாத்தியம் என்பதை நிரூபித்துக்காட்டியவர் Elon Musk.
இந்த சாதனைகள் நிகழ்த்த அவர் மேற்கொண்ட பயணமும் பயணித்த பாதையும் கரடுமுரடானவை. ஒரு கட்டத்தில் தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரக்கூட முடியாத அளவுக்கு தனது செல்வத்தையெல்லாம் நிறுவனங்களில் முடக்கி ‘இனி Elon இன் கதை முடிந்தது’ என்று முழு Silicon Valley யும் அவருக்கு இரங்கற்பா பாட முனைந்த நிலையில், சாம்பலிலில் இருந்து மீண்டும் உயிர்பெற்று வந்த Phoenix பறவைபோல, மீண்டும் உச்சங்களைத்தொட்ட அவரது இன்றைய சொத்து மதிப்பு ஏறக்குறைய 200 பில்லியன் டாலர்கள்.
இவரைப்போன்ற பணக்காரர்கள் அல்லது இவரை மிஞ்சிய செல்வந்தர்கள் இன்று இருக்கிறார்கள். ஆனால் Elon Musk-கைப்போல வேறு ஒருவர் இல்லை. Microsoft இன் Bill Gate ஐயும் Apple இன் Steve Job ஐயும் தாண்டி, அடுத்த கட்ட தீர்க்கதரிசி என்று பார்க்கும்போது, ‘Elon Musk இன் உயரத்தைத் தொட வேறு ஒருவர் இல்லை’ என்று நவீன விஞ்ஞான தொழில்நுட்ப உலகம் அடித்துச் சொல்கிறது.
AP
Elon Musk ஐ hero என்று சொல்பவர்களும் உண்டு; வில்லன் என்று சொல்பவர்களும் உண்டு. “ நீங்க நல்லவரா கெட்டவரா ? நாலுபேருக்கு நல்லது செய்றதுன்னா நல்லவன் தான்” நாலுபேருக்கல்ல மொத்த மனித சமுதாயத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கான மேடையை அமைத்துக்கொடுத்தவர் அவர் என்பது மட்டுமல்ல, மனிதன் சுமார் ஒருமணித்தியாலத்தில் hyper loop வழியாக உலகின் எந்த நாட்டுக்கும் செல்லமுடியும், வேற்று கிரகத்தில், உதாரணமாக செவ்வாயில் குடியேற முடியும், artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்பன போன்ற சிந்தனைகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமான செயல்வடிவம் கொடுத்து வருபவர் Elon Musk என்பதில் கருத்து முரண்பாடு இருக்கமுடியாது.
பல வருட பொதுசன ஊடக அனுபவமும் New York Times பத்திரிகையின் தொழில்நுட்ப மற்றும் Silicon Valley நிருபருமாகிய நூல் ஆசிரியர் Ashley Vance இன் உழைப்பு இந்த நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. Elon Musk உடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்களுடன் தொடர்பு கொண்டும், ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டும், Elon Musk இன் இருவேறு முகங்களை, நாணயத்தின் இரு பக்கங்களை, வாசகர்களுக்கு கொண்டுவர அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளின் முழு வடிவந்தான் இந்த சரிதை.
Amazon
‘கனேடியரான தாய்க்கும் தென் ஆப்பிரிக்கரான தந்தைக்கும் மூத்த மகனாக தென்னாப்பிரிக்காவில் பிறந்தது; நூல்களை வாசிப்பதில் இருந்த அதீத ஆர்வம் காரணமாக, தனக்குக் கிட்டிய எல்லா நூல்களையும் வாசித்து முடித்தபின், encyclopaedia வை – கலைக்களஞ்சியத்தை வாசிக்கத் தொடங்கியது, 10 ஆவது வயதிலேயே Commodore VIC என்ற கணிணியின் programming நுணுக்கங்களை மூன்றே நாட்களில் கற்றுத்தேர்ந்து Blaster என்ற ஒரு computer game ஐ தனது 12 ஆவது வயதில் உருவாக்கி அதன் Basic code ஐ PC and Office Technology என்ற சஞ்சிகைக்கு 500 டாலர்களுக்கு விற்றது; கட்டாய இராணுவ சேவையைத்தவிர்ப்பதற்காக 17 வயதில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தது; பின்னர் கையில் பணமோ, உதவி செய்ய தெரிந்தவர்களோ இல்லாத நிலையில், அமரிக்கா வந்து பல சிரமங்களுக்கு மத்தியில் Pennsylvania பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பொருளாதாரம் என்பவற்றில் பட்டம் பெற்றது. பின்னர் California வந்து தனது சகோதரனுடன் Zip 2 நிறுவனத்தை வெறும் 28000 டாலர்களைக்கொண்டு ஆரம்பித்து, நான்கே வருடங்களில் அந்த நிறுவனத்தை 340 மில்லியன் டாலர்களுக்கு Compaq நிறுவனத்திற்கு விற்றது’ என்று 20 வயதிலேயே மில்லியனர் ஆன Elon இன் நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கவில்லை.
சில பல கனவுகள் அவருக்கு இருந்தன. அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல் “தூக்கத்தில் வரும் கனவுகளல்ல அவை; தூங்கவிடாத கனவுகள்”. அந்த வானத்தை வசப்படுத்துவதற்காக அவர் நடத்தும் போராட்டம் தான் அவரது வாழ்க்கைப் பயணம். அந்த பயணத்தில் திறமைசாலிகள் போற்றவும்படுகிறார்கள், தண்டிக்கவும்படுகிறார்கள், நல்லவர்களும் வெளியேற்றப்படுகிறார்கள் வல்லவர்களும் வெளியேற்றப்படுகிறார்கள். இலக்குகளை அடையத்தவறியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள், தவறியதற்கான காரணத்தை விளக்குபவர்களை விட வெற்றிகரமான தீர்வுகளை முன்வைத்து இலக்கை அடைய திட்டம் வைத்திருப்பவர்கள் மற்றொரு வாய்ப்பைப் பெறுகிறார்கள், போற்றப் படுகிறார்கள். Elon இன் உலகம் மிகவும் விசித்திரமானது. அவரது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. மணமுறிவும் மறுமணமும் சகஞமாகின்றன. Elon Musk இன் கனவுகளுக்கு முன்னால் மற்றெல்லாம் இரண்டாம் பட்சமாகிப் போகின்றன.
AP
NASA வின் இணையதளத்தில் செவ்வாய்க்கிரகம் பற்றிய செய்தியைப் படித்தபின் அதீத ஆர்வம் காரணமாக ராக்கெட் ஒன்றை வாங்க ரஷ்யா சென்றதும், அரசுகளுக்கு மட்டுமே கொடுக்க சாத்தியமான பெருந்தொகையைக் கொடுக்கமுடியாத நிலையில் திரும்புவதும், விமானத்தில் திரும்பும்போதே தன்னால் இந்த ராக்கெட்டை நிர்மாணிக்கமுடியும் என்பதற்கான வரைபடத்தை தனது சகாக்களுக்கு காட்டியதும் மட்டுமல்ல, Spacee X இன் ஆரம்பமும் பறக்கும் விமானத்தில் தான் உதயமானது. ராக்கட்டின் பாகங்கள் கணிணிகள், மென்பொருள்கள் எல்லாமே. Space x தொழில் கூடத்தில் தயாரிக்கப்பட்டன. இதன்மூலமாக மிக க் குறைந்த செலவில் ராக்கெட்டை நிர்மாணிக்கமுடியும் என்பதை நிரூபித்தவர் Elon.
ISS என்ற சர்வதேச விண்வெளி ஆராய்சி நிலையத்திற்கு தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை NASA வின் சார்பில் கொண்டு செல்வதன் மூலமாகவும், பல் நாட்டு அரச நிறுவனங்களுக்காக satellite என்ற செய்மதிகளை விண்வெளிக்கு கொண்டு செல்வதோடு பல்வேறு வாடிக்கையாளருக்கு செய்மதிகளை வடிவமைத்து விண்வெளிக்கு ஒப்பீட்டளவில் மிகக்குறைவான செலவில் கொண்டு சென்று நிர்மாணிப்பதன்மூலமாகவும் Space X தொடர்ந்து பெருமளவில் விண்வெளி பயணங்களில் ஈடுபட்டுவருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, ‘மனித குலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. புதுப்பிக்கக் கூடிய sustainable energy பற்றிய சிக்கல்களை எம்மால் தீர்க்கமுடியும் என்பது மட்டுமல்ல, நாம் வேற்று கிரகங்களுக்கு சஞ்சாரம் செய்யவும் இங்குள்ள வாழ்க்கை முறைமையை அங்கு எடுத்துச்செல்லவும் முடியும்’ என்றும் திடமாக நம்பும் Elon musk ஒரு வித்தியாசமான விஞ்ஞானி.
Ashlee Vance இன் Elon musk …. பல திருப்பங்களைக்கொண்ட, புனைகதைக்கு ஒப்பான சுவரஸ்யமான நூல். இந்த நூல் வாசகனுக்கு ஒரு புதிய அனுபவமும் கூட.
Source : SBS tamil