செய்திகள்

அறிமுகமாகிறது Emoji பொறிக்கப்பட்ட வாகன இலக்கத்தகடு!

அறிமுகமாகிறது Emoji பொறிக்கப்பட்ட வாகன இலக்கத்தகடு! 1

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகிறது Emoji பொறிக்கப்பட்ட வாகன இலக்கத்தகடு!
குறுஞ்செய்தி, மின்னஞ்சல், சமூக வலைத்தளம் என பல தளங்களில் emojis பயன்பாடு இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டநிலையில் குயின்ஸ்லாந்து மாநில வாகன இலக்கத் தகடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
Personalised Plates-தமக்கு விரும்பிய வார்த்தைகளை அல்லது எழுத்துக்களைப் பொறித்து வாகன இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்பவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் emoji-க்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதன்மூலம் உலகிலேயே முதல்முறையாக வாகன இலக்கத்தகடுகளில் emoji-க்களை அறிமுகப்படுத்திய நாடாக ஆஸ்திரேலியா காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
Smiley face, heart eyes, sunglasses face, winking face ,laugh-out-loud ஆகிய 5 emojis முதற்கட்டமாக மார்ச் 1 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக Personalised Plates Queensland தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத்தகட்டில் emoji பொறிக்கப்பட்டுள்ளமையானது வெறுமனே அலங்காரத்ததுக்காக மாத்திரமேயன்றி குறித்த வாகன இலக்கத்துடன் சேர்ந்ததல்ல என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Emojis பொறித்த இலக்கத்தகடைப் பெறுவதற்கு சுமார் 340 டொலர்கள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button