செய்திகள்

குரு பெயர்ச்சி 2022: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள் இதோ உங்களுக்காக – Guru peyarchi 2022

Courtesy: oneindia

குருபகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

ஏப்ரல் மாதம் 13ம் தேதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடபெயர்ச்சியாக போகிறார்.

இந்த இடமாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என பார்ப்போம்.

மேஷம்

விரைய குருவால் செலவு அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு 4,6,8 ஆமிடங்களில் பார்வை படுகிறது. உங்களில் சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள்.

புதிய வாகனங்கள் அமையவும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுடனான பகை நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுங்கள்.

ரிஷபம்

லாபகுருவினால் வருமானம் கூடும் ராசிக்கு 3,5,7ஆமிடங்களில் பார்வை விழுகிறது. குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும்.

கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நவகிரக குருவிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

தொழில் ஸ்தான குருவால் நன்மை. குருவின் பார்வை 2,4,6ஆமிடங்களின் மீது விழுகிறது. உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தென்திட்டை ராஜ குருவை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்

பாக்ய ஸ்தான குரு பலன் அதிகம். 1,3,5ஆமிடங்களில் குருவின் பார்வை விழுகிறது. தள்ளிப் போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு, இனி உங்கள் இருக்கையைத் தேடி வரும். பாடி திருவலிதாயம் குருவை வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம் 

அஷ்டமத்து குரு கவனம் தேவை தேவை. 2,4,12 ஆமிடங்களில் குருவின் பார்வை விழுகிறது. உங்களுக்குக் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.

வரவேண்டிய பணம் வந்து சேரும். ஒரளவு பணம் வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு வாங்குவீர்கள். வியாழக்கிழமை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

களத்திர குரு நன்மை செய்யும் 1,3,11 ஆமிடங்களில் குருவின் பார்வை விழுவதால் வாரிசு இல்லையே என ஏங்கித் தவித்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும்.

பிள்ளைகளின் கோபம் தணியும். அவர்களின் வாழ்க்கைத் தரம், வசதி, வாய்ப்புகள் உயரும். பட்டமங்கலம் சென்று குரு தட்சிணா மூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்

ருண ரோக சத்ரு ஸ்தான குருவினால் பாதிப்பு வரும். குருவின் பார்வை 2,12,10 ஆமிடங்களில் விழுகிறது. வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போகவும்.

வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணா மூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் 

பூர்வ புண்ணிய குருவால் அதிர்ஷ்டம் வரும். 1,9,11 ஆமிடங்களில் குருவின் பார்வை விழுகிறது. அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாழக்கிழமையன்று முறப்பநாடு குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு 

சுக ஸ்தான குருவினால் நன்மை குரு பகவானின் பார்வை 12,10,8 ஆகிய இடங்களின் மீது விழுகிறது.வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிய வேண்டி வரும்.

உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம். வியாழக்கிழமை குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

தைரிய ஸ்தான குரு பட்டையை கிளப்பும். உங்கள் ராசிக்கு 11,9,7 ஆமிடங்களில் குருவின் பார்வை விழுவதால் கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. குருவின் பார்வை எதையும் தைரியமாக முடிவெடுக்கும் சக்தியைத் தருவதுடன் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

குடும்ப குருவினால் லாபம் குரு பகவானின் பார்வை 6,8,10ஆமிடங்களில் பார்வை படுவதால் எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பாடி திருவலிதாயம் குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம் 

ஜென்ம குரு கவனம் தேவை. குருவின் பார்வை 5,7,9ஆமிடங்களில் விழுவதால். எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். ஒருவேளை வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம்.

ஜன்ம குருவாக இருப்பதால் எப்போதும் உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை வைத்து வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.  

Back to top button