செய்திகள்

குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (கடகம், சிம்மம்)

குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (கடகம், சிம்மம்) 1

கடக ராசி நேயர்களே!

கலங்கி வருபவர்களின் கவலைகளைத் தீர்ப்பவர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 9 ஆம் இடம் 11 ஆம் இடம் மற்றும் 1ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 9 ஆம் இடம் மேற்படிப்பு மற்றும் அயல் நாட்டுப் பயணத்தை குறிக்கும். 11 ஆம் இடம் இலாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றுதலைக் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலம், மன நலம் மற்றும் வெற்றி தோல்வியைக் குறிக்கும். 
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். 

கடக ராசி – தொழிலும் வியாபாரமும்: 

இக் காலக்கட்டத்தில் தொழிலில் தங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் உண்டு. உங்களது அனுபவங்களை உடன் பணிபுரிவோரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் அவர்களும் பயனுறுவர். வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சாதுரியமாக கையாளும் பக்குவம் உங்களிடம் இருக்கும். பல வேலைகளை சாதிக்கக் கூடிய திறமைகள் இக் காலக் கட்டத்தில் மெருகேறும். 

கடக ராசி – பொருளாதாரம்:

பொருளாதார உயர்வு உண்டு, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நல்ல சேமிப்புகளுக்கு இடமுண்டு. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளும் கண்ணுக்கு புலப்படுகின்றது.

கடக ராசி – குடும்பம்:

குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அண்டை அயலார் அனுசரணையாக இருப்பர். வீட்டில் வயதானவர்களின் வழி காட்டுதல்கள் கைகொடுக்கும். சுப விசேஷங்களுக்கு இடமுண்டு.

கடக ராசி – கல்வி:

உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்வி நிறுவனங்களில் பரிமளிக்க முடியும். தங்களது திறமைகளை வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பம் உருவாகும். எந்தத்துறையாக இருந்தாலும் அதில் பளிச்சிட முடியும்.

கடக ராசி – காதலும் திருமணமும்:

இளைஞர்கள் காதல் வலையில் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உறவில் புரிதல் உண்டு. திருமண வாய்ப்புகள் தெரிகிறது. விட்டுக் கொடுத்தலால் உறவுகள் வலுப்படும். விருப்பங்கள் நிறைவேறக் கூடிய காலம் இது.

கடக ராசி – ஆரோக்கியம்:

தேக ஆரோக்கியம் பேண முடியும். உணவு முறைகளில் ஓர் ஒழுக்கம் கடை பிடித்தால் அதுவே போதுமானது. மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
  • தொழிலில் அங்கீகாரம்
  • நிதிவரவு பெருகுதல்
  • பொருளாதார மேன்மை
  • சுமுக உறவு
  • உயர் கல்வி வாய்ப்பு
  • திருமண வாய்ப்புகள்
  • தேக ஆரோக்கியம்

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவதால் நற்பலன்கள் கூடும்.

அம்பாள் வழிபாடு நன்மை பயக்கும்.

சிம்ம ராசிகாரர்களே!

மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே!

தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8 ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 
8 ஆம் இடம் வம்சாவழி சொத்துக்களையும் எதிர்பாராத செலவினங்களையும் தொல்லைகளையும் குறிப்பிடும். 10 ஆம் இடம் பதவி மற்றும் அந்தஸ்தை குறிப்பிடும். 12 ஆம் வீட்டைப் பார்ப்பதால்  சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். 

சிம்ம ராசி – தொழிலும் வியாபாரமும்: 

இந்த காலக் கட்டத்தில் வீண் பழிகளை சுமக்க நேரலாம். கூடுதல் வேலைப்பளு தெரிகின்றது. கவனச் சிதறலால் தொழிலில் தவறுகள் ஏற்படலாம். அதனை தவிர்க்கவும். வியாபாரத்தில் உள்ளோர் வியாபார நடவடிக்கைகளை கை விடவேண்டாம். ஆனால் புதிய முயற்சிகளை மட்டும் சிறிது காலத்திற்கு ஒத்திப் போடலாம். 

சிம்ம ராசி – பொருளாதாரம்: 

பொருளாதாரம் சுமாராக இருக்கும். நிதி உதவி பெறுவதை பெருமளவில் குறைக்கவும். ஏனென்றால் பணம் திரும்ப செலுத்துவதில் சிரமம் தெரிகின்றது. தான தர்ம செலவுகள் தெரிகிறது ஆடம்பர செலவுகளும் தான் உண்டு. இதோடு ஆன்மிக பயணங்களும் செலவுகளை கொண்டு வரும். 

சிம்ம ராசி – குடும்பம்: 

குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். தாங்கள் தான் அதிகமாக பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது. உறவுகளில் சிறு சிறு விஷயங்களால் விரிசல்கள் ஏற்படும். அதனை பொருட்படுத்த வேண்டாம். 

சிம்ம ராசி – கல்வி: 

மேற்கொண்ட கல்வியை குறித்த காலத்தில் முடிக்க முடியும். எல்லோரிடமும் சுமுக உறவு பராமரிக்கவும். அவ்வப்போது தங்களது துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிந்து கொண்டு செயல்படவும். 

சிம்ம ராசி காதலும் திருமணமும்: 

திருமணம் தாமதமாகலாம். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் அவசரப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயங்களையும் வாழ்க்கைத் துணையுடன் விவாதித்து பின் முடிவெடுக்கவும்.

சிம்ம ராசி ஆரோக்கியம்: 

சரியான உணவு முறையினால் நல்ல ஆரோக்கியம் பேணலாம். பெரும் ஆபத்து ஏதுமில்லை. தியானமும் உடற்பயிற்சியும் மிகவும் நல்லது. 
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்: 
  • கூடுதல் வேலைப் பளு 
  • வீண் பழிகள் ஏற்படுதல் 
  • கடனை திரும்ப செலுத்துவதில் சிரமம்

முன்னெச்சரிக்கை: 

முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். பிரதி பலனை எதிர்பாராது கடமைகளைச் செய்யவும். 

பரிகாரம்: 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் பண்ணவும். 
இந்தியாவில் வசிப்பவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
சிவ வழிபாடு நன்மை பயக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px ‘Tamil Sangam MN’}
span.s1 {font: 12.0px ‘Helvetica Neue’}

p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px ‘Tamil Sangam MN’}

Back to top button