உலகின் அரிய வகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கொல்லப்பட்டது!
உலகில் காணப்பட்ட ஒரே ஒரு வெள்ளை நிறமான பெண் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும் வேட்டைகாரர்களால் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கென்யாவின் கரிசா கவுண்டியில் உள்ள கிராமத்தில் ஒட்டகச்சிவிங்கிகளின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்ததை வன பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கிக்குப் பிறந்த மற்றொரு ஆண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி அதே வனப்பகுதியில் வசித்து வருகிறது. இதுவே தற்போது உலகில் மிஞ்சியுள்ள ஒரே ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி ஆகும்.
அதேவேளை இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் முழு கென்யாவிற்கும் பெரும் சோகமான தருணமென அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : Sky News