செய்திகள்

ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற செய்திகள்

எதிர்காலத்தில் ஏதோவொரு காலகட்டத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் ஃபால்க்லாண்ட் தீவில் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடலுக்கு அடியே நெடுங்காலமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுவருவதாகக் கூறும் அவர்கள், இந்த நிலச்சரிவின் காரணமாக எதிர்காலத்தில் 300 அடிகளுக்கு மேல் அலைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

அதே நேரம் இதற்காக யாரும் அஞ்ச வேண்டாம் என்று கூறு அவர்கள், இவ்வாறான சுனாமி ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள். ஃபால்க்லாண்ட் தீவானது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

சயின்ஸ் டைரக்ட் சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவு பிரசுரமாகி உள்ளது.

Back to top button